சத்துணவு ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

சத்துணவு ஊழியர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பொது சேவை மையத்திற்கு சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சத்துணவு ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் சத்துணவு ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்க அந்த கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த பொது சேவை மையத்தின் ஆப்பரேட்டர், அங்கு பணியாற்றி வரும் கம்பியூட்டர் ஆப்பரேட்டர், கடை உரிமையாளர் உள்பட 4 பேர் அந்த பெண்ணை பொது சேவை மையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை 4 பேரும் வீடியோவாக எடுத்து அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே 28-ம் தேதி நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் பாலியல் வன்கொடுமை வீடியோவை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரில் முக்கிய குற்றவாளியான அதேகிராமத்தை சேர்ந்த நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக படித்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.       

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com