பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..! புதுச்சேரி அரசு அறிவிப்பு

பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுச்சேரி,

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கியுளது. ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவகிறது. இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், "பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவல் 15 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.    

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com