டெல்லியில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்: மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்

கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்: மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் உயரத்தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து. தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் வகுப்புகளைத் தொடர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. சமூகக் கூட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அதேசமயம் அனைத்து கூட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், மெட்ரோ ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com