ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு

மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
Published on

போபால்,

சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது.

கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தனின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தொட்டியில் கிடந்த 4 உடல்களை மீட்டனர்.

இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரன் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1ம் தேதி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்கள் கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com