கனடா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மசாஜ் மைய ஊழியர் கைது

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கனடா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மசாஜ் மைய ஊழியர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு விதானசவுதா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பிர பல ஓட்டல் உள்ளது. இங்கு மசாஜ் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் மையத்துக்கு கனடா நாட்டை சேர்ந்த 44 வயதான ஒரு பெண் மசாஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை, அங்கி ருந்த ஊழியர் ஒருவர் அரைநிர்வாணமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஊழியர் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், மசாஜ் செய்யா மல் அங்கிருந்து வெளியே வந்து, ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்கொள்ளவில்லை. மேலும் அவரிடம் மசாஜுக்கு வாங்கிய ரூ.10 ஆயிரத்தில் ரூ.7 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண், சம்பவம் பற்றி ஆன்லைன் மூலம் விதானசவுதா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகா ரின் பேரில் போலீசார் ஓட்டல் நிர்வாகம், பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை வந்தனர். இந்த நிலையில் கனடா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாக மசாஜ் மைய ஊழியரான 32 வயது வாலிபரை விதான சவுதா போலீ சார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com