

ரஜேரி,
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ரஜோரியில் உள்ள காட்டு பகுதிகளில் நேற்று ( வெள்ளிக்கிழமை) ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பின்னா நெருப்பு வேகமாக பரவி வந்த நிலையில் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்,
மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், எங்களால் கூட தீயைக் கட்டுப்படுத்த கடினமாக இருப்பதாக தெரிவித்தனா மற்றும் தீ கட்டுப்பாடு இன்றி பரவி வருகிறது,இவ்வாறு கூறினா.
இதைத்தொடாந்து "அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனா, ஆனாலும் தீயணைப்புத் துறையினர் இங்கு வரமுடியாத நிலை என்பதால் தீ கட்டு பாட்டிற்கு கொண்டு வருவது கடினம்," என உள்ளூர்வாசிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நடந்த பிறகு இந்திய விமானப்படை காத்ரா மாவட்டத்தின் டிரிகுடா மலைகளில் ஹெலிகாப்டர்களில் வாளிகளை பயன்படுத்தி வனபகுதி தீயை கட்டுப்படுத்தி வந்தனா. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காடுகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் மழை இல்லாத சூழ்நிலையினால் தான் காட்டுத்தீ பரவியது என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனா.