வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை

காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் சிறப்பு தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.
மாதா வைஷ்ணவ தேவி கோவில்
மாதா வைஷ்ணவ தேவி கோவில் 
Published on

ஜம்மு,

காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.

அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் ஹெலிகாப்டர் சேவை தொடங்கும். ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள பவனுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

சிறப்பு தரிசனம் முடித்து, அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.35 ஆயிரமும், அடுத்த நாள் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.50 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com