அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
x

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும், அனைவரின் நலனிற்காகவும் தன்னுடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

2026-ம் ஆண்டு ஆங்கில புது வருட பிறப்பையொட்டி உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், தங்களுடைய நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன்படி, பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், 2026-ம் ஆண்டு, ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் தரும் ஆண்டாக அமையட்டும்.

இந்த ஆண்டு, உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், வளமும் கொண்டு வரட்டும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிட்டட்டும். நீங்கள் ஆற்ற கூடிய அனைத்து பணிகளும் நிறைவேறட்டும். நம்முடைய சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்பட இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவும், அனைவரின் நலனிற்காகவும் தன்னுடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

ஆங்கில புது வருட பிறப்பையொட்டி நாட்டு மக்கள் அனைவரும், தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுடன் நகரங்களின் பல்வேறு பகுதிகளுக்கும், மத வழிபாட்டு தலங்களிலும் ஒன்று கூடியுள்ளனர். காலையிலேயே திரளானோர் கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story