'இயேசுவின் போதனைகள் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்' - பிரதமர் மோடி வாழ்த்து


இயேசுவின் போதனைகள் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து
x

கிறிஸ்துமஸை முன்னிட்டு, மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு, மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அனைவருக்கும் அமைதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்." இவ்வாறு அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்று, பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story