மகாவீரரின் சிந்தனைகள் வலிமையும், நம்பிக்கையும் அளிக்கட்டும்: பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கோபா பகுதிக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு உள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
மகாவீரரின் சிந்தனைகள் வலிமையும், நம்பிக்கையும் அளிக்கட்டும்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

பகவான் மகாவீரரின் ஜன்ம கல்யாண புனித நல்வாழ்த்துக்கள். பகவான் மகாவீரரின் வாழ்க்கையும் போதனைகளும் சத்தியம், அகிம்சை மற்றும் கருணையின் பாதையை தொடர்ந்து ஒளிர செய்வதகாவும். மேலும் அவரது கொள்கைகள் ஆன்மீக ரீதியாக நமக்கு உத்வேகம் அளிப்பதாகவும்.

இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமாகவும் உள்ளன. சமத்துவம் மற்றும் கருணைக்கு அவர் அளித்த முக்கியத்துவம், சமூகத்தின் மீதான நமது பொறுப்பை இணைந்து செயல்பட வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என தெரிவித்தார். பகவான் மகாவீரரின் சிந்தனைகள் எப்போதும் மனித குலத்திற்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் என கூறினார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தனது மற்றொரு பதிவில் இன்று பிரதமர் மோடி தாம் திறந்து வைக்க இருக்கும் புதிய அருங்காட்சியகத்தின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com