

புதுடெல்லி,
ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. 'ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் பயண ஏவுதல் திட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த நிலையில், விண்ணில் பாயவுள்ள தனியார் ராக்கெட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1. ஸ்கைரூட் நிறுவன விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். விக்ரம்-1 ராக்கெட் வெற்றிபெறட்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.