பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி- பகுஜன் சமாஜ் அறிவிப்பு

உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இறங்கியுள்ளார்.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

லக்னோ,

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க தயார் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

மக்களைவைக்கு 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதல் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் உ.பி. முன்னாள் முதல் மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி கூறியதாவது:

மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், அவர்களுடன் கூட்டணி அமைக்க தயார். எதிர்க்கட்சிகள் மரியாதைக்குரிய வகையில் எங்கள் கட்சியை அணுகி, அவர்களின் செயல்திட்டங்களை எங்கள் தலைவரிடம் (மாயாவதி) தெரிவித்தால், கூட்டணி வைப்பது குறித்து அவர் இறுதி முடிவெடுப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com