குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை மாயாவதி நீக்கி உள்ளார்.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி
Published on

போபால்,

பகுஜன் சமாஜ் கட்சி, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகிறது. அதே சமயத்தில், மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பதேரியா தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ரமா பாய், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசினார். நேற்றுமுன்தினம், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பிரகலாத் படேல் முன்னிலையில் அவர் அப்படி பேசினார்.

இதையடுத்து, ரமா பாயை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சித்தலைவர் மாயாவதி நேற்று உத்தரவிட்டார். ரமா பாய், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com