உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சியின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி தலைவர் சுட்டுக்கொலை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், பிஜ்னோர் நாடாளுமன்ற தொகுதியில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், அந்தப் பகுதி பகுஜன்சமாஜ் கட்சியின் உள்ளூர் தலைவர் முகமது அசன், அவரது அலுவலகத்தில் நேற்று அமர்ந்து தனது பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அவரது மருமகன் சாதப்பும் உடனிருந்தார். அப்போது அவர்களுக்கு இனிப்பு தருவதற்காக வந்ததுபோல வந்த மர்ம நபர்கள், சுவீட் பாக்சில் மறைத்து எடுத்து வந்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, அவர்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது அசனையும், அவரது மருமகனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com