மெகா கூட்டணி முறிவு: இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி என மாயாவதி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மெகா கூட்டணி முறிவு: இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி என மாயாவதி அறிவிப்பு
Published on

லக்னோ,

மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதாவை வீழ்த்த , எலியும் பூனையுமாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்தன. மெகா கூட்டணி என்ற பெயரில் இந்த கட்சிகள் அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் 75 -இல் போட்டியிட்டன. ஆனால், இந்தக்கூட்டணி வெறும் 15 இடங்களில் மட்டுமே வென்றது. போதிய அளவு மக்கள் ஆதரவு இல்லாததால், படுதோல்வியை இந்தக்கூட்டணி சந்தித்தது. இதனால், இரு கட்சிகள் இடையே மனக்கசப்பு நிலவியது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக (9), பகுஜன் சமாஜ் (1), சமாஜ்வாதி (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இதனால் அந்த 11 தொகுதிகளும் தற்போது காலியாகவுள்ளன. இதையடுத்து அந்த 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சித்தலைமையிடம் தனித்துப்போட்டியிடுவது பற்றி பேசிவிட்டதாகவும், இது நிரந்தர முறிவு இல்லை என்றும் மாயாவதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com