ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய மேயரின் மகன்- போக்குவரத்து பாதித்ததால் 4 பேருடன் கைதானார்


ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய மேயரின் மகன்- போக்குவரத்து பாதித்ததால் 4 பேருடன் கைதானார்
x
தினத்தந்தி 4 March 2025 12:22 PM IST (Updated: 4 March 2025 2:07 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் மேயரின் மகன் மற்றும் 4 பேரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாநகர மேயராக மீனாள் சவுபே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், மேயரின் வீடு உள்ள சங்கோரபட்டா பகுதியில் மேயரின் மகன் மிரினாக் சவுபே, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தி உள்ளார். பட்டாசு சத்தமும் காதைப் பிளந்துள்ளது.

இதனால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. இது போலீசாரின் கவனத்துக்கும் சென்றது. மேயர் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். போலீசார் மேயரின் மகன் மற்றும் 4 பேரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளும் பா.ஜனதாவுக்கு எதிர்க்கட்சியினர் கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.

1 More update

Next Story