எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
Published on

புதுடெல்லி,

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் (91) இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மலையாள சினிமா மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது படைப்புகள், மனித உணர்வுகளின் ஆழமான ஆய்வுடன், தலைமுறைகளை வடிவமைத்துள்ளன, மேலும் பலருக்கு ஊக்கமளித்துள்ளது. அமைதியானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுத்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி." என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com