

காக்கிநாடா,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவர் நேற்று நள்ளிரவில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.சாய் ராம் என அடையாளம் காணப்பட்ட மாணவர் தனது அறை தோழர் வேறொரு அறையில் படித்து கொண்டிருந்தபோது, தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு வந்த சக தோழர், சாய் ராமின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.