விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை

பீதரில் கல்லூரி விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை
Published on

பீதர்:

விடுதியில் தங்கியவர்

பீதர் டவுன் பகுதியில் பிரிம்ஸ் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஸ்ரீராம்(வயது 22) என்ற மாணவர் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தார். இவர் கடந்த சில நாட்களாக வகுப்பில் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் சக நண்பர்களுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது விடுதியின் 7-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதைக்கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து நியூ டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

போலீஸ் வழக்குப்பதிவு

மேலும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது சக மாணவர்கள், அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறினர். ஆனால் அதற்கான காரணம் முதலில் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீராமின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்சினை இருந்து வந்ததா எனவும் விசாரிக்க தொடங்கி உள்ளனர். விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com