

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மேலவையில் முத்தலாக் தடை மசோதா இன்று வாக்கெடுப்புக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது.
முத்தலாக் மசோதாவை மக்களவையில் 10 எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அ.தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்சிகளுடன் இணைந்து மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குலாம் நபி ஆசாத்தின் அறையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.