"மேகதாது அணை ஒப்புதல் பெற துரித நடவடிக்கை" கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"மேகதாது அணை ஒப்புதல் பெற துரித நடவடிக்கை" கர்நாடக பட்ஜெட் உரையில் சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு, மாநில முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும்.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்து அனுப்பப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாக செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com