

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட் என்பவர் உயிரிழந்தார். இந்தக் கெலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காஷ்மீர் நிர்வாகம் சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜன்நாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், "எனது ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பான சூழல் அமைத்துக் கெடுக்கப்பட்டது.
பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த 2016-ம் ஆண்டு காலக்கட்டத்திலும் கூட, ஒரு காஷ்மீர் பண்டிட் கூட கெலை செய்யப்படவில்லை. இவ்வாறு அமைதி பூங்காவாக இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று வன்முறை நிகழ்வதற்கு காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமே காரணம். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது. தற்போது நடக்கும் வன்முறைகளுக்கும் அந்த திரைப்படத்தை பெறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றார்.