சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து
Published on

ஸ்ரீநகர்,

இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் நாளை மோதுகிறது. அப்போது, வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக, ஆரஞ்சு நிற சீருடை அணியும் என்று இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கிரிக்கெட் அணியை காவிமயமாக்கும் முயற்சி என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னை தண்ணீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி இதுகுறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-

சர்வதேச தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். சென்னை நகரில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், நாம் கிரிக்கெட் அணியின் சீருடை நிறம் விஷயத்தில் நமது ஆற்றலை செலவிட்டு வருகிறோம். தவறான பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com