

ஸ்ரீநகரில் இருந்து கந்தர்பல் செல்லும் சாலையில் ஜகுரா என்ற பகுதியில் கார் ஒன்றில் வந்த 3 தீவிரவாதிகள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் காவல் துணை ஆய்வாளர் இம்ரான் தக் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் முதல் மந்திரி முப்தி, எந்த இலக்கையும் அடைவதற்கு வன்முறை உதவாது. அதற்கு பதிலாக சமூகத்தின் மொத்த கட்டுக்கோப்பையும் அது கிழித்தெறியும் என கூறினார். பலியான இம்ரானின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களையும் அவர் தெரிவித்து கொண்டார்.