பஞ்சாப் வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சி பிடிபட்டார்

பஞ்சாப் வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த நபரான மெகுல் சோக்சி டோமினிக்கா தீவில் பிடிபட்டார்.
பஞ்சாப் வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சி பிடிபட்டார்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவாவில் தலைமறைவாக வசித்து வந்தார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 23-ந்தேதி முதல் ஆண்டிகுவாவில் இருந்து அவர் மாயமானார். எனவே அவரை பிடிப்பதற்கு சர்வதேச போலீசான இன்டர்போல் மஞ்சள் நோட்டீஸ் வெளியிட்டது. அதன்படி அவரை கரீபியன் தீவுக்கூட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அதன்பலனாக அண்டை தீவான டோமினிக்காவில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு அங்குள்ள போலீசாரிடம் மெகுல் சோக்சி சிக்கினார். அவரை ஆண்டிகுவா போலீசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி ஆண்டிகுவா குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com