மேகதாது - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா முடிவு

திட்ட அறிக்கை விரைவாக தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
மேகதாது - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.

பட்ஜெட் உரையில் சித்தராமையா கூறியதாவது,

நமது மாநிலத்தின் முதன்மைத் திட்டமான மேகதாது திட்டம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நமது மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாகும். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத்துறை அனுமதி கோரும் முன்மொழிவு ஆகியவை விரைவில் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகாவின் கனகபுரா அருகே சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் ஒரு அணையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com