

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரஞ்சன் கோகாய் நியமன எம்.பியாக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பியாக முன்னாள் தலைமை நீதிபதி இன்று பதவியேற்றுக்கொண்டார். ரஞ்சன் கோகாய் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.