மீசை மீது கொண்ட ஆசை.. இளம்பெண்ணின் முயற்சிக்கு பெருகும் ஆதரவு

கண்ணூர் அருகே மீசையை பேணி வளர்க்கும் இளம்பெண்ணின் முயற்சிக்கு கேலி பேசிய ஆண்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
மீசை மீது கொண்ட ஆசை.. இளம்பெண்ணின் முயற்சிக்கு பெருகும் ஆதரவு
Published on

கேரளா:

கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியில் வசிப்பவர் ஷைஜா (வயது 34). இவர் சிறுவயதாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்து வந்தது. அப்போது இவரை சுற்றியுள்ளவர்கள் மிகவும் கேவலமாகவும், அவமானப்படுத்தியும் உள்ளார்கள். அப்போது இவர் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார்.

பின்பு இவருக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டதால் அதை நம்மளுக்கு பிளஸ் பாயிண்டாக மாற்றி எடுக்க வேண்டும் என வைராக்கியம் வந்துள்ளது. அதை ஒட்டி பெண்களோ ஆண்களோ மீசை வளர்வதை குறித்து கேலியாக பேசுவதை அவர் எந்தவிதமான கவலையும் அடையவில்லை.

இந்த நிலையில் இவருக்கு பாலக்காடு சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவரும் 'நீ மீசை வளர்ப்பது எனக்கு சந்தோசம் தான், நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்' எனகூறி உள்ளார். லட்சுமணன் பாலக்காட்டு பகுதியில் வயரிங் தொழில் செய்து வருகிறார்.

தற்போது இந்த பகுதியில் உள்ள பெண்கள் கூட ஷைஜா வளர்க்கும் மீசையை கண்டு புகழ்ந்து வருகிறார்கள். மீசை வளர்ப்பதற்கு ஆதரவும் அளித்து வருகிறார்கள். கேலி பேசிய ஆண்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

மேலும் ஷைஜா திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து பணம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை இப்போது இந்த பகுதியில் மீசை ஷைஜா என கூறி அழைத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com