மழை பெய்ய வேண்டி ஆண்களுக்கு திருமணம்; ஒடிசாவில் வினோதம்

இந்த சடங்கின்படி தம்பதியினர் ஒரு நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். பின்னர் ஜதின் மற்றும் கலந்தி தனித்தனியாகப் பிரிந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா
Published on

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத் தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. பருவமழை தொடங்காத போதிலும் மழை பெய்யா ததால் மக்கள் கவலையில் உள்ளனர். ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அதன்படி ஜதின் கதுவா (வயது 29), கலந்தி நாயக் (27) என்ற வாலிபர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முன்வந்தனர்.நேற்று முன்தினம் மாலை, மணமகன் கோலத்தில் இருந்த ஜதின், திருமண ஊர்வலம் நடைபெறவுள்ள சித்தேஸ்வரி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். கலந்தி அங்கு மணமகள் கோலத்தில் தயாராக இருந்தார். வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளங்களுக்கு மத்தியில் திருமண ஊர்வலம் நிறைவடைந்தது.

அதன்பிறகு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்தது. மக்கள் உணவு உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். லட்சுமணன் கதுவா என்பவர் மணமகனின் தந்தையாகவும், மணகோபிந்த நாயக் என்பவர் மணமகளின் தந்தையாகவும் நடித்தனர். உணவுக்குப் பிறகு, திருமண சடங்குகள் நிறைவடைந்தன. இந்த சடங்கின்படி தம்பதியினர் ஒரு நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். பின்னர் ஜதின் மற்றும் கலந்தி தனித்தனியாகப் பிரிந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com