தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் - அதிர்ச்சி சம்பவம்

மராட்டிய மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தனது தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளா.
தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் - அதிர்ச்சி சம்பவம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம், பல்கா பகுதியில் உள்ள மோகடா தாலுகாவை சோந்தவா பாண்டு சாவ்ஜி(70). இவருக்கு காசிநாத் என்ற மகன் உள்ளார். காசிநாத் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாண்டு சாவ்ஜி அப்பகுதியில் உள்ள வயலில் வேலை பார்த்து வந்தார். வயலில் வேலை செய்து வரும் பாண்டுவிற்கு நேற்று முன்தினம் அவரது மனைவி உணவு கொண்டு வந்துள்ளார். அப்போது, அந்த வயல்பகுதிக்கு வந்த காசிநாத் தனது தந்தை பாண்டு கையில் வைத்திருந்த கோடாரியை பறித்து அவரை கொடூரமாக தாக்கினார்.

கோடாரியால் பாண்டுவை மகன் காசிநாத் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மகன் கோடாரியால் வெட்டியதால் படுகாயமடைந்த பாண்டு ரத்த வெள்ளத்தில் வயலில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பாண்டுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மகன் காசிநாத் தனது கணவன் பாண்டுவை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது குறித்து பாண்டுவின் மனைவி போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து தப்பியோடிய மனநலம் பாதிக்கப்பட்ட காசிநாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை பாண்டுவை மகன் காசிநாத் கோடாரியால் வெட்டிக்கொன்றதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com