கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கலாம்: எய்ம்ஸ் தலைவர்

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கலாம்: எய்ம்ஸ் தலைவர்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:- தற்போது நாட்டில் சமூக பரவல் உள்ளது. இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நமது சுகாதார சேவைகள் நெருக்கடியை சந்திக்கும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், லாக்டவுன் பகுதிகள், பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல், தடம் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்ற பெரிய நடவடிக்கைகள் மூலமாக கொரோனா பாதிப்பை குறைக்க நாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மைக்ரோ லாக்டவுன் பகுதிகளை ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காத செயல்களை நாம் செய்யலாம். அதாவது, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம். என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com