இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள நவீன செயற்கை கால்கள்

குறைந்த எடையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை கால்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள நவீன செயற்கை கால்கள்
Published on

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பல்வேறு துறைகளின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இஸ்ரோ தற்போது நவீன இலகு ரக செயற்கை கால்களை தயாரித்துள்ளது. இதன் எடை சுமார் 1.6 கிலோ ஆகும். விபத்து உள்ளிட்ட காரணங்களால் கால்களில் மூட்டு பகுதிக்கு மேல் வரை துண்டிக்கப்பட்டவர்களுக்கு இந்த செயற்கை கால்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே சந்தையில் உள்ள செயற்கை கால்களை விட 10 மடங்கு விலை குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை கால்களில் உள்ள மைக்ரோ ப்ராசசர், டி.சி. மோட்டார், சென்சார் ஆகியவை இதனை பொருத்தி நடப்பவரின் தன்மைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு, நடப்பதை மிக எளிமையாக ஆக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த செயற்கை கால்கள் விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com