நடுவானில் என்ஜின் கோளாறு: டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நடுவானில் என்ஜின் கோளாறு: டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்
Published on

டெல்லியில் இருந்து லே நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 150 பயணிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்டோர் இருந்தனர்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து. முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பி இயக்க முடிவு செய்தனர். அதன்படி, டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விட்டனர். என்ஜின் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பதுபற்றிய விவரங்கள் வெளியிடப்பட வில்லை. விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com