

புதுடெல்லி,
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, இந்தியாவில் வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மற்றும் கிண்டலான பதிவுகள் குவிந்து வருகின்றன.
வாக்குத் திருட்டு புகாரில், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்களில் டிரம்பைக் கேலி செய்துள்ளனர். "ஞானேஷ் குமார் இருந்திருந்தால் டிரம்புக்கு இந்த நிலை வந்திருக்காது" என்று அபிஜீத் திப்கே பதிவிட்டுள்ளார்.
இதேபோல “டிரம்புக்கு இப்போது ஞானேஷ் குமார் மிகவும் தேவைப்படுகிறார்” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு மீமில், பிரதமர் மோடியிடம் டிரம்ப், "ப்ரோ, எனக்கு ஞானேஷ் குமாரை கொடுங்கள்" எனக் கேட்பது போல் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு புகாரில் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில், இந்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.