2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்: மதுபோதையில் தந்தை வெறிச்செயல்

2 வயது குழந்தையை மதுபோதையில் தரையில் அடித்து தந்தை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்: மதுபோதையில் தந்தை வெறிச்செயல்
Published on: 

திருவனந்தபுரம்,

தாயின் மடியில் தூங்கிய 2 வயது பெண் குழந்தையை தூக்கி தரையில் அடித்துக் கொன்ற தந் தையை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தந்தை

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பரிதோஷ் மண்டல் (வயது 27). தொழிலாளியான இவருடைய மனைவி ரோண்ட் வாலி. இந்த தம்பதிக்கு 2 வயதில் தீபிகா என்ற குழந்தை இருந்தது.

இவர்கள் தொழில் விஷயமாக கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மதுபோதையில் பரிதோஷ் மண்டல் வீட்டுக்கு நிதானமின்றி வந்தார். அங்கு தாயின் மடியில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

குழந்தையை கொன்ற கொடூரம்

அந்த சமயத்தில் பரிதோஷ் மண்டல், குழந்தையை தூக்கினார். பிறகு திடீரென ஓங்கி தரையில் அடித்ததால் குழந்தை அலறியது. தந்தையின் திடீர் வெறிச்செயலால் குழந்தை மயக்க நிலைக்கு சென்றது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய், துடிதுடித்து போனார். பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில், தந்தை பரிதோஷ் மண்டல், குழந்தையை தரையில் அடித்து தாக்கிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். 2 வயது குழந்தையை மதுபோதையில் தரையில் அடித்து தந்தை கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

X