மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம்; ராஜ்தாக்கரே சொல்கிறார்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம் என ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
Photo Credit:PTI
Photo Credit:PTI
Published on

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளது. நேற்று 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க புலம் பெயர் தொழிலாளர்களே காரணம் என நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம் தான் அதிக அளவில் தெழில்மயமான மாநிலம். இதனால், இங்கு பணியாற்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் தெழிலாளர்கள் இங்கு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து மராட்டியத்துக்கு வரும் தெழிலாளர்களுக்கு அவர்களது செந்த மாநிலங்களில் பேதுமான அளவுக்கு கொரோனா சேதனை வசதிகள் இல்லை. மராட்டியத்தில் கொரோனா தெற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தெழிலாளர்களே காரணம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com