அரியானாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 2.6 ஆக பதிவு

அரியானாவில் காலை 9.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அரியானாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 2.6 ஆக பதிவு
Published on

சண்டிகர்,

அரியானாவில் உள்ள சோனிபட் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.90 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com