கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்

மதியம் 1.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்
Published on

பெங்களூரு.

கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 16.04 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.63 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

X

Daily Thanthi
www.dailythanthi.com