

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று லேசான நில அதிர்வு எற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பெங்களூரு ரூரல் மாவட்டம் திம்மோஜனஹல்லி கிராமத்தில் இருந்து வடக்கே 500 மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இன்று காலை 9.01 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.