மேகலாயாவில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

மேகலாயாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மேகலாயாவில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
Published on

ஷில்லாங்,

மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. தொடர்ந்து வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com