மராட்டிய மாநிலம் நாசிக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.6 ஆக பதிவு

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாசிக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.6 ஆக பதிவு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் நகரின் வடக்கு பகுதியில் இந்த அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறியபடி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com