காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளைஞர் பலி

காஷ்மீரின் புல்வமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் இளைஞர் ஒருவர் பலியானார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளைஞர் பலி
Published on

புல்வாமா,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பின்னிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரவு 10 மணியளவில், புல்வாமா மாவட்டத்தின் அர்ருபக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐஜாஸ் அகமது மாலிக் (27) என்ற இளைஞர் அவரது வீட்டுக்கு வெளியே துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாலிக் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனரா என்பது குறித்து உடனடி காரணம் எதுவும் தெரியவில்லை என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று காஷ்மீர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com