ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதல்: பெண் பரிதாப சாவு

ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதியதில் பெண் பரிதாப சாவு
ஸ்கூட்டர் மீது மினி பஸ் மோதல்: பெண் பரிதாப சாவு
Published on

பெங்களூரு: அல்சூர் அருகே கவுதம் நகரை சேர்ந்தவர் மேரி மார்கரெட் (வயது 52). இவர், தனது கணவருடன் ஸ்கூட்டரில் வெளியே சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு அல்சூர் அருகே பழைய மெட்ராஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த ஒரு மினி பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது.

இதன் காரணமாக ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மேரி மார்கரெட் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அல்சூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவரை தேடிவருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com