

திருப்பதி,
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதி போலீஸ் பரேட் மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை மந்திரி அன்னம் ராமநாராயணா கலந்து கொண்டார்.
விழாவின்போது நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த மந்திரி ராமநாராயணா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை சீரடைந்த நிலையில் அவர் மீண்டும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.