

புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில், 2020 கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே மாதம் 12 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்த விழா ஜுன் இறுதி அல்லது ஜுலை துவக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதற்கான தொடக்க விழா, காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.