

புதுடெல்லி,
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி டெல்லியில் இன்று மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். அப்போது சென்னைக்கு அருகே ஜவுளி நகர் அமைப்பதற்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி வலியுறுத்தினார்.
மேலும் நாகை, காஞ்சிபுரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களின் திட்ட வரைவுகளுக்கு விரைந்து அனுமதி வழங்கவும், ஈரோடு, நாமக்கல், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமையவுள்ள 10 ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் ஆர்.காந்தி வலியுறுத்தியுள்ளார்.