மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்ய மறுப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே குற்றச்சாட்டு

மத்திய அரசு ஒதுக்கீட்டின்படி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்ய மருந்து நிறுவனங்கள் மறுப்பதாக மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே குற்றம் சாட்டியுள்ளார்.
மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்ய மறுப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே குற்றச்சாட்டு
Published on

மும்பை,

அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மிக தாமதமாக அனுமதி வழங்குவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் படி மருந்து நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளை தர மறுப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், "ரெம்டெசிவிர் மருந்துகளை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எவ்வளவு என்பதை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அந்த ஒதுக்கீட்டின் படி, ஒரே ஒரு மருந்து நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் மருந்து சப்ளை செய்ய மறுக்கின்றன. இதனாலும் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா உதவிய ரெம்டெசிவிரில் மராட்டியத்திற்கு 52 ஆயிரம் மருந்துகள் கிடைத்துள்ளன" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com