நீதிபதிகள் நியமன விவகாரம்: ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி பதில்

நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை குறை கூறியிருந்தார். #RahulGandhi
நீதிபதிகள் நியமன விவகாரம்: ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி பதில்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குறை கூறியிருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, நிலுவையில் இருக்கும் வழக்குகளால் நீதி அமைப்பு உருக்குலைந்து கிடக்கிறது. ஐகோர்ட்டுகளில் 400க்கு மேலும், கீழ்கோர்ட்டுகளில் 6 ஆயிரத்துக்கு மேலும் நீதிபதிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை. ஆனால் சட்ட மந்திரி போலி செய்திகளில் ஆழ்ந்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்த மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத், நாடு விடுதலை அடைந்த பின் சாதனை அளவாக கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 126 ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் பாரம்பரியத்தில் தீவிர அரசியல் விரோதங்களில்கூட நீதித்துறை குறித்து விவாதம் நடைபெறாமல் ஒதுக்கியே வைக்கப்பட்டு இருந்தாக தெரிவித்த அவர், இதுவே தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பேஸ்புக் தகவல்களை திருடியதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய பதற்றத்தில்தான் ராகுல்காந்தி இவ்வாறு கூறுகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com