உத்தரபிரதேசத்தில் சட்டசபையில் தூங்கிய மந்திரி - வைரல் வீடியோ

சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்களை கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 24 மணி நேர சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் இரவிலும் பங்கேற்ற சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்களை கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், சட்டசபையில் சென்று சந்தித்தார். அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்தார்.
மேலும் சட்டசபையில் இருந்த மாநில ஜலசக்தித்துறை மந்திரி சுவாதந்திர தேவ் சிங்கின் கண்கள் மூடியிருப்பதையும் வீடியோவாக எடுத்து இருந்தார். இவற்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மாநில அரசை குற்றம் சாட்டியுள்ளார். அதில் அவர், ‘இந்த அரசு தூங்குகிறது. எதிர்க்கட்சி விழித்து இருக்கிறது. 24 மணி நேர சட்டசபை கூட்டத்தை நடத்துவதன் மூலம் மாநிலத்தை நடத்துவதில் பா.ஜனதா பின்தங்கியிருப்பதை நிரூபித்துள்ளது, அதனால்தான் அது 24 மணி நேரமும் வேலை செய்வது பற்றிப் பேசுகிறது’ என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், ‘ஒரு தூங்கும் அரசின், தூங்கும் மந்திரிகள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார். அகிலேஷ் யாதவின் இந்த குறறச்சாட்டை சுவாதந்திர தேவ் சிங் மறுத்து உள்ளார். அவரது குற்றச்சாட்டு எதிர்க்கட்சியின் வழக்கமான பணிதான் என கூறியுள்ளார்.






