பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Published on

சென்னை,

இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்துகொள்ளும் போட்டி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியாகும். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த போட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இம்மாதம் 19-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக சென்னையில் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதற்காக அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.

இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்து அதற்கான அழைப்பிதழை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com